20230504 111206 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டிக்கு கூட்டாக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Share

தையிட்டிக்கு கூட்டாக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்தநாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு விஐயம் செய்து விகாரையை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடனும் கலந்துரையாடி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.

சமகாலத்தில், காங்கேசன்துறை தையிட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அவர்களை பாதுகாப்பு தரப்பு முற்றுகையிட்டுள்ளமையை கண்டித்தும், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்வதாக சுமந்திரன் எம்.பி. கூட்டத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து சக பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் கூட்டாக வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...