இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

Share
2 3
Share

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அநுராதபுரம் தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் காவல்துறை தலைமையக பிரதான பரிசோதகருக்கு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (03) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வழியாக கொழும்புக்கு காரில் பயணித்தபோது சாலியபுர கல்வல சந்தியில் அநுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்ததை அறிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சட்டத்தரணி சுனந்த தென்னகோன் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, வழக்கில் சந்தேகநபரின் பெயர் அர்ச்சுன லோச்சன என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டமையடுத்து, சரியான சந்தேகநபரை அடையாளங்கண்டு அறிவிக்குமாறு நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

பின்னர், மேலும் ஒரு அறிக்கையின் மூலம், அநுராதபுரம் காவல்துறை தலைமையகம் வழக்கில் சரியான சந்தேக நபரின் பெயரை இராமநாதன் அர்ச்சுனா என்று திருத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சந்தேக நபராக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...