‘மேலவை இலங்கை கூட்டணி’ – உதயமாகியது புதிய கூட்டணி

vimal 1

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன.

மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின் கொள்கைப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ, யுதுகம, விஜயதரணி அமைப்பு என்பன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

தலைவராக விமல் வீரவன்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version