சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

speaker mahinda yapa abeywardena 700x375 1

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும்.

அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிய வருகிறது.

நாடாளுமன்றத்தில் உள்ள சில கட்சிகள் மற்றும் குழுக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கான யோசனைகளை சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் சுயாதீன குழுவொன்றும் சபாநாயகரிடம் அரசியலமைப்புதிருத்தத்தை கையளித்துள்ளன.

இதேவேளை, அடுத்தவாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் விதம் மற்றும் அவற்றின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version