Untitled 1 14 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு

Share

இலங்கையில் பலவகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இந்த விலை குறைப்பானது இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 60 வகையான மருந்துகளுக்கு 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...