tamilni 139 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்

Share

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக இலங்கைக்கு வரவழைப்பதற்கு, மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர்தரத்தில் காணப்பட வேண்டும்.

எமது சுகாதார கொள்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் வைத்தியசாலை கட்டமைப்பு, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன. பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

எனவே, அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கும் வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் இன்மையால், பிரித்தானியா தமது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, இலங்கையும் பிரித்தானியாவின் வைத்தியசாலை கட்டமைப்பை நடத்திச் செல்கிறது.

அதன்படி, உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...