நாட்டைக் காக்க ஒருவேளை உணவை தியாகம் செய்யுங்கள்!!!

food mb

நாட்டில் அடுத்து வருகின்ற நாள்களில் ஒரு வேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்

இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்து மக்கள் இவ்வாறு ஒரு வேளை உணவை தியாகம் செய்வதன் மூலம் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் நாட்டையும் எதிர்கால சந்ததியினரையும் அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்லக் கூடியதாக அமையும்.

எனவே மூன்று வேளை உணவு உண்டு வந்தவர்கள் அடுத்து வருகின்ற சில நாள்களில் இருவேளை உணவு உண்ண வேண்டிய நிலை வரலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தியாகங்களை செய்தே வருகின்றனர்.

நாட்டின் தேசிய உற்பத்திகளை காக்கவும் ஊக்குவிக்கவுமே இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நாட்டில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்ளாடைகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

இதேவேளை இவரின் இந்தக் கருத்துக்கு பல தரப்புக்களிலுமிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. அத்துடன் சமூக வலைத்தளங்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

Exit mobile version