மே தினப் பேரணிகள்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடெங்கும் மே தினப் பேரணிகள்!

Share

மே தினத்தையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் இந்த முறை சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்று நிறைவடையவுள்ளது.

குறித்த பேரணி சுதந்திர சதுக்க வளாகத்தை சென்றடையவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மே தினக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பிலுள்ள பிரதான கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் புதிய நகர மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜே.வி.பி. இன்று 4 இடங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிரதான மே தின ஊர்வலம் இன்று பிற்பகல் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டரங்கில் ஆரம்பமாகி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு – கோட்டையை வந்தடையவுள்ளது.

இது தவிர, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் ஜே.வி.பியின் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்காகக் கட்சியின் தோட்டத் தலைவர்கள், தலைவிகள் மற்றும் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அந்தந்தத் தோட்டங்களிலும் பிரதேசங்களிலும் மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இது தவிர நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்களும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...