அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்தக் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
#SriLankaNews