5 39
இலங்கைசெய்திகள்

சாணக்கியனை நிராகரித்த மாவை! பல வருடங்கள் கழித்து வழங்கிய பதிலடி

Share

சாணக்கியனை நிராகரித்த மாவை! பல வருடங்கள் கழித்து வழங்கிய பதிலடி

கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை (Mavai Senathirajah) சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் என்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு சம்பந்தன் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தை சந்திக்கும் படி என்னை அறிவுறுத்தினார். இப்படியாகத்தான் நான் கட்சிக்குள் வந்தேன்.

தற்போது கட்சியில் இருந்து பதவி விலகிய தலைவர், பதவி ஆசையில் இருக்கின்றார் என்பதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

சிலர் மாவை சேனாதிராஜாவை வளர்த்த கிடா அவரது மார்பில் பாய்ந்தது என்று எழுதியிருந்தார்கள். அவர் என்னை வளர்க்கவுமில்லை, நான் அவருக்கு எதிராகப் பாயவும் இல்லை.

கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது சகல கதவுகளும் மூடப்பட்ட அறையில் தான் நடைபெற்றது.

இருப்பினும், மாவை சேனாதிராஜாவின் வருகையின் போது கதவு திறக்கப்பட்டது. அந்த வேளையில் பேசப்பட்ட விடயங்கள் மாத்திரமே வெளியே நின்ற ஊடகவியலாளர்களுக்கு கேட்டது. அவை செய்திகளாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

எனினும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டத்திற்கு கொழும்பு, அம்பாறை, திருக்கோயில் உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்ட உறுப்பினர்கள் 10 மணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

ஆனால், தலைவர் மாவை சேனாதிராஜா வரவில்லை. அது வழமையாக நடப்பது தான். நாங்கள் எல்லோரும் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

எனவே, இம்முறை மிகத் தாமதமானதால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு நான் கூறினேன். அதற்கு சிவமோகனால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் கட்சியின் சரிவை சீரமைப்பது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றோம் என்பது பற்றிப் பேச வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...