அச்சுவேலியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்!

Robbery.jpg

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 7மணியளவில் ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியால் பயணித்த நபரிடம் மோட்டார் வண்டியில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி 15,000 ரூபா வரையான பணம் உட்பட உடைமையில் வைத்திருந்த ஆவணங்களையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைவெளி உட்பட பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version