ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா, சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பலம்மிக்க அமைச்சராக மேர்வின் சில்வா செயற்பட்டார். 2015 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.
2015 பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் கட்சி தாவும் அரசியலில் ஈடுபட்டுவந்தார். இறுதியில் சுதந்திரக்கட்சியில் இணைந்தார்.
#SriLankaNews