மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாட்டி வதைக்கும் வறுமை! – பலர் தொழிலை இழக்க நேரிடும்

Share

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்துக்குக் கீழ் கொண்டுவர முடியாது.

அரசு சலுகை வழங்காதவிடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் பலர் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...