தேர்தலை கண்காணிக்க பல அமைப்புக்கள்!!

image 32dc2756a6

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெப்ரல், கபே, சி.எம்.ஈ.வி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இரண்டு கண்காணிப்புக் குழுக்களுக்கு மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய அமைப்புகள் வெளிப்புற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version