2 39
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! முன்னாள் எம்.பி. மனோ சூளுரை

Share

பொதுத் தேர்தலில் சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! முன்னாள் எம்.பி. மனோ சூளுரை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம் எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களைச் செய்துகொண்டதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாகக் கலந்துரையாடுவோம்.

நாங்கள் தனிக் கட்சி. தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அடிப்படையில் இம்முறை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் எங்களின் ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

எங்கள் மக்கள் எங்களின் நிலைப்பாட்டை ஏற்று நடந்திருக்கின்றார்கள். அது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தெரியும்.எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம்.

இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கின்றோம். அதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...