கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டத்தை மேற்கொண்டு வரும் சிங்களச் சகோதரர்களுடன் தமிழ்ச் சகோதரர்களும் கைகோர்த்து போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“காலிமுகத்திடல் புரட்சியில் தமிழரின் பங்கு சற்று குறைவு. பேரினவாதம் எமக்கு ஏற்படுத்திய காயம் பெரிது. ஆகவேதான் தாமதம்.
ஆனாலும், இதுதான் இனவாதக் கட்டமைப்பை மாற்றுவதற்கு வந்துள்ள அரிய வாய்ப்பு. ஆகவே தமிழர்கள், சிங்களச் சகோதரர்களுடன் கரங்கோர்த்து காலிமுகத்திடல் புரட்சியில் இணைய வேண்டும்” என்றும் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#SriLankaNews