ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
“கோட்டாபயவே வெளியேறு”, “குடும்ப ஆட்சி வேண்டாம்”, “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு” போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews