மன்னார், பூநகரி காற்றாலை திட்டம் – அனுமதி வழங்கியது அரசு

image 048e3bbbee

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு காற்றாலை திட்டங்களுக்கான 500 மில்லியன் டொலர் முதலீட்டிற்குதற்கு தகாலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மன்னாரில் 286 மெகாவோட் மற்றும் பூநரியில் 234 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டத்திற்கே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version