மன்னார் எண்ணெய் வளம்! – ஆய்வுகள் ஆரம்பம்

mannr

மன்னார் எண்ணெய் வளம்! – ஆய்வுகள் ஆரம்பம்

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் உள்ள கனிய எண்ணெய் வளம் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமானங்களைப் பயன்படுத்தி ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட பிரபல ஆய்வு நிறுனத்தின் ஊடாக இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டில் கனிய எண்ணெய் வளம் காணப்படக்கூடிய பகுதி 20 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி ஆய்வு செய்வதற்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.இவ் ஆய்வுக்காக பணம் செலவிடப்படுகிறது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 20 பகுதிகளையும் 837 அலகாக பிரித்து புதிய வரைபடம் தயாரித்து அதற்கமைய தரவுகளை சேமிக்க விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன் மன்னார் கடற்படுக்கையில் தற்போது எம் 2 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடு வெளிநாட்டு கடன் நெருக்கடியிலிருந்து மீள மன்னார் கடற்படுக்கையில் காணப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆராய்வதுதான் ஒரே வழி என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Exit mobile version