வைத்தியசாலையில் நோயாளி மீது கத்திக்குத்து! 

137f13d7 86cc 41af aff1 cb7da7e8f2e0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மன்னார், நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீதே கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டுத் தாக்குதலில் பலியாகிய நிலையில் வைத்தியசாலையில் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version