கடற்படை வெறியாட்டம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னாரில் கடற்படை வெறியாட்டம்! – 7 மீனவர்கள் வைத்தியசாலையில்

Share

மன்னார் – பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 7 மீனவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேசாலையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் கடலுக்குப் புறப்படத் தயரான படகுகளைக் கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏறபட்டது. இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின அடிப்படையில் தொழிலுக்குச் சென்றனர்.

இவ்வாறு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாலை 5.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவ்விடத்துக்குப் படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு படகுகளுடன் தீடைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர்.

வேண்டுமானால் எம்மைக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லுங்கள். எதற்கு யாருமே அற்ற தீடைக்குக் கொண்டு செல்கின்றீர்கள்? என மீனவர்கள் கேள்வி எழுப்பியபோதும் அதற்குச் செவிசாய்க்க மறுத்த கடற்படையினர் மீனவர்களைத் தீடைக்குக் கொண்டு சென்றனர்.

தீடையில் இறக்கிய மீனவர்களை மீண்டும் சோதனை செய்ததோடு உடல் பரிசோதனைகளையும் மேற்கொண்ட சமயம் பேசாலையில் முரண்பாடு ஏற்பட்டபோது பிடிக்கப்பட்ட வீடியோப் படத்தின் மூலம் மீனவர்களை இனங்கண்டு ஆறு மீனவ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையின் உயர் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 14
இலங்கைசெய்திகள்

சூரிய குடும்பத்தில் புதிய விண்மீன் பந்தயம்!

சர்வதேச வானியலாளர்கள் சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு விண்மீன்களுக்கு இடையேயான (interstellar) பொருள் வேகமாக பயணிப்பதை...

Murder Recovered Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

குருநாகலில் பாரிய தீ விபத்து

குருநாகல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இன்று மதியம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குருநாகல் –...