11 2
இலங்கைசெய்திகள்

யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி

Share

யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி

மன்னார்(Mannar) நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட 40 வயதுடைய ஜேசுதாசன் ரஞ்சித்குமார் என்பவரின் சடலமே இதன்போது தோண்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன்பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ள நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்ததையடுத்து கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து, கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

அத்துடன்,குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்தவகையில் சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குறித்த நபரின் சடலத்தை நாளையதினம் (03) தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாளையதினம் குறித்த நபரின் சடலம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...