மானிப்பாயில் வாள்வெட்டு! – இளைஞன் மருத்துவமனையில்

IMG 20220814 WA0166 1

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (வயது 21) எனும் இளைஞன் மீதே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் வாள் வெட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version