பெல்லன்வில ரஜமஹா விகாரையைச் சேர்ந்த பெண் யானை இறந்துவிட்டதாக விகாரை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
76 வயதான யானை இன்று (6) அதிகாலை விகாரை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளது .
பக்தர்கள் மத்தியில் “மெனிக்க” என்று இந்த யானை அழைக்கப்பட்டுள்ளது.
ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராக்கள் மற்றும் கோயில் நிகழ்வுகள் உட்பட கலாசார மற்றும் மத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஒரு பகுதியாக இருந்து வந்நதமை குறிப்பிடத்தக்கது.