இலங்கையில் தடுப்பூசி அட்டை கட்டாயம்!

vgb

நாட்டில் கொவிட் தடுப்பூசி அட்டைப் பாவனையை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அரசு.

அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் மக்கள் சனத்தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றாட செயற்பாடுகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளும் நாளை முதல் வழமைபோல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மக்களின் நலன் கருதி பொதுமக்கள் ஒன்றுகூடுகின்ற பொதுஇடங்களில் தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version