வத்தளையில் 80 வயது முதியவர் மாயம்..!!
வத்தளை – ஹுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயதான முத்தையாபிள்ளை தேவராஜ் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் கடந்த 23ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
வத்தளை – ஹுனுபிட்டிய சந்தியில் முத்தையாபிள்ளை தேவராஜ் இறுதியாக இருந்துள்ளதாக தெரிய வருகிறது.
முத்தையாபிள்ளை தேவராஜ் காணாமல் போனமை தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
தொலைபேசி இலக்கம் :- 076-5707125 / 070-7122666