32 2
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள விடுதிகளில் காதலியை வைத்து காதலன் செய்த அதிர்ச்சி செயல்

Share

கொழும்பிலுள்ள விடுதிகளில் காதலியை வைத்து காதலன் செய்த அதிர்ச்சி செயல்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் தனது காதலியை பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் விநியோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நாரஹேன்பிட்டி ஆகிய பிரதான இரவு விடுதிகளில் நடனமாடும் தனது காதலியை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளார்.

கஸ்கிஸ்ஸ சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் பாரிஸ் என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 70,00000 ரூபாய் பெறுமதியான 35900 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், 900 போதைப்பொருள் LSD முத்திரைகள் மற்றும் 18 எக்ட்ரீஸ் மாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், கல்கிஸ்ஸ பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீட்டில் பலத்த பாதுகாப்பில் தங்கியிருநு்துள்ளார்.

கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் அவரது 23 வயது காதலி ஊடாக இரவு விடுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது காதலியுடன் வீட்டில் தங்கியிருந்த போது, ​​உப பொலிஸ் பரிசோதகர் சாமிக்க ஜயவீர உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாலைதீவு மற்றும் நைஜீரிய நபர்களிடம் இருந்து போதைப்பொருட்களை பெற்று, வீட்டில் இருந்து பொதி செய்து தனது காதலி மூலம் இரவு விடுதிகளுக்கு விநியோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...