23
இலங்கைசெய்திகள்

இரு பிள்ளைகளின் தந்தையால் பல பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Share

இரு பிள்ளைகளின் தந்தையால் பல பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

பல மாணவர்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்கள் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், பேராதனை – இஹல முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய சந்தேகநபரை கண்டி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 பாடசாலை மாணவிகளும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பாடசாலை மாணவியையும் ஐந்து மாணவர்களையும் பல சந்தர்ப்பங்களில் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி மற்றும் 5 மாணவர்களை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்ட சந்தேகநபர் நேற்று (02) கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் மற்றுமொரு சிறுவனை அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தவறான செயற்பாட்டிற்கு முற்பட்ட போது சந்தேகநபரின் கையை கடித்து விட்டு சிறுவன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 15 வயதுடைய சிறுமி பேராதனைப் பொலிஸில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இது தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார் சந்தேகநபரை எச்சரித்து விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் வந்த பொலிஸ் குழுவினர் கிரிபத்கும்புர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...