கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் காலையில் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து கோப்பாய் – இராச பாதை வீதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இராச பாதை வீதியில் உள்ள தோட்ட வெளியில் ஆள்நடமாற்றம் அற்ற பகுதிகளில் நின்று காலை வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க வருவோர் மற்றும் மரக்கறி கொண்டு செல்வோரை இலக்கு வைத்து , பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து வந்துள்ளனர்.
வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொறுப்பதிகாரி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment