இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, மல்லாவி 4ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
இதன்போது கொட்டான்களால் இளைஞர் குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் படுகாயமடைந்து மல்லாவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி, வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவர் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயமடைந்த நால்வர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மல்லாவிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews