tamilni 278 scaled
இலங்கைசெய்திகள்

அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்

Share

அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்

இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட மலேசியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.

மலேசிய நாட்டவரான 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு அதே விமானத்தில் தோஹாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அபுதாபியில் திருகோணமலை பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு தரகர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் விமான அனுமதி மற்றும் விசாவை வழங்கியுள்ளார்.

அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை இளைஞர் அன்றைய தினம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்ற நிலையில்,பின்னர், இலங்கை இளைஞரிடமிருந்து இலங்கை கடவுச்சீட்டை குறித்த மலேசியர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இலங்கை கொழும்பில் உள்ள மலேசிய தூதரகத்தினை தொடர்புகொண்டு தனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாக அறிவித்து, புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 09/19 மாலை தோஹாவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு QRR-யில் விமானம் மூலம் வருகை தந்துள்ளார்.

நாட்டிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிப் பணிகளை மேற்கொண்ட போது அவரது மொழி உச்சரிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதற்கமைய, மலேசியரை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள், அவர் வந்த அதே கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் மீண்டும் தோஹாவுக்கு நாடு கடத்தப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FkbR17V07rjgyLRc1Wd3T
செய்திகள்விளையாட்டு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய திகதி: மூன்று நாள் போட்டி நாளை ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் புதிய திகதிகள்...

articles2FvyfjFNUz649yh3WVdxRR
இலங்கைசெய்திகள்

5 மாவட்டங்களுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களை வெளியேற அறிவுறுத்தல்!

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய...

b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 607 ஆக உயர்வு: 214 பேர் காணாமல் போயுள்ளனர்!

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது....

Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...