அரசியல் கைதிகளுக்காக அரசியல் தீர்மானமொன்றை எடுங்கள் – சாள்ஸ்

8b4dfecf8de4c5a7f68822318193795c M

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் உரையாற்றிய அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 1994 இல் கைது செய்யப்பட்டவர்கள்கூட இன்னும் சிறையில் உள்ளனர். வழக்கு முடிவதற்கு சிரமமாக உள்ளது. விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் அரச தரப்பில் வழங்கப்பட்டது.

ஆனாலும் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை. சாட்சியங்கள் இல்லை. குற்ற ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும், மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது.

எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அல்லது புனர்வாழ்வின் பின்னராவது விடுவிப்பதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.என்றார்.

#SrilankaNews

 

 

Exit mobile version