நாவலர் கலாசார மண்டபத்தை கைமாற்றியமைக்கு எதிராக மகஜர் கையளிப்பு!

image 4f91847ade

யாழ். மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாசார மண்டபம், வடக்கு மாகாண ஆளுரால் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர், ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் இந்த மகஜரை கையளித்தனர்.

குறித்த மகஜரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version