24 668aae2e0fddd 11
இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் : கருணா அம்மான் திட்டவட்டம்

Share

பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் : கருணா அம்மான் திட்டவட்டம்

இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthy Muralitharan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (07) நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அதிபரின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், அதிபரின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை அதிபர் கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய அதிபர். அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil Wickremesnghe) வாக்களிப்பார்கள்.

அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. அதிபரின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...