ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்குவதற்காக உலர் உணவுப் பொருட்களை இதன்போது மைத்திரியிடம் சீனத் தூதுவர் கையளித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
#SriLankaNews