முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி சி.ஐ.டியில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து 2005 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டையைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையைத் தரையில் அடித்து மண்டையோட்டை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாகப் படுகொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே 2019ஆம் ஆண்டு அவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.
#SriLankaNews