எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாடு தற்போது நெருக்கடி நிலையை எதிநோக்கியுள்ள நிலையில் ‘தேசிய சீர்த்திருத்தங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்’ தொடர்பில் இச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து தரப்பினராலும், நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews