தாமதிக்கும் தேர்தல் – மஹிந்த எச்சரிக்கை

Mahinda Deshapriya

உள்ளூராட்சித் தேர்தலை தள்ளிப் போடுவது நல்லதல்ல. ஏப்ரல் 25 ஆம் திகதியும் தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருப்பதாக தேசிய எல்லை நிர்ணய குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) முடிவடைந்துள்ளதுடன் தேர்தலை நடாத்துவது அவசியம். நிலைமை எப்படியாக இருந்தாலும் பரவாயில்லை, தேர்தலை நிர்ணயித்த காலத்திற்கு அப்பால் தள்ளிப் போடுவது நல்லதல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“உள்ளூராட்சித் தேர்தல்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாவது நடைபெறும் என நான் நம்புகிறேன். ஏப்ரல் 25 தேர்தல் நடந்தால் அது நல்லது. ஆனால் தற்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் அதுவும் சாத்தியமற்றது எனத் தோன்றுகிறது.

ஏனென்றால் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளைக் கூட அரசாங்க அச்சுத் திணைக்களத்திலிருந்து தேர்தல்கள் திணைக்களம் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை” என தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version