mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மஹிந்த யாழ். விஜயம்! – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார்.

இதன்போது யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் அவர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும் அவர் தரிசிக்கவுள்ளார்.

இதேவேளை, தென்மராட்சி – மட்டுவில் வண்ணத்திப் பாலத்துக்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிரதமரால் திறந்துவைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையத்தையும், வர்த்தகத் தொகுதிகளையும் திறந்துவைக்கவுள்ளார்.

மாவட்ட விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக 30 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையத் தொகுதிகள் மத்திய நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...