மஹிந்த இன்றிரவு விசேட உரை! – அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு

mahinda e1649666546721

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்றிரவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக அந்த அறிக்கையில் விவரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலவேளை, பதவி விலகும் அறிப்பைக்கூட, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கையாக வெளியிடக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

அத்துடன், இடைக்கால அரசை அமைப்பதற்கான அழைப்பை விடுக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடெங்கும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version