உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு
அரசாங்கத்தில் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் குழு புதிய அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது தொடர்பில் இறுதிக்கட்ட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த குழு கடந்த சில மாதங்களில் அவ்வப் போது கூடி புதிய வேலைத்திட்டம் குறித்து கலந்து ரையாடியது.
அந்த பேச்சுகள் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் புதிய அணிக்கு பெயரொன்றை தெரிவு செய்யும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாக தெரிகிறது.
புதிய கூட்டணியின் அரசியல் கொள்கை,அதன் வகிபாகங்கள் குறித்து சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்றும் நடந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே டலஸ் அணி , விமல் அணி என பிரிந்து சென்றுள்ள நிலையில் எஞ்சியுள்ள இளவயது எம்.பிக்களும் புதிய கூட்டணி தொடர்பில் செயற்பட ஆரம்பித்திருப்பது அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளதாக அறியமுடிகிறது.
Leave a comment