8 29
இலங்கைசெய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் மீண்டும் களமிறங்கும் மகிந்த ராஜபக்‌ஷ

Share

தேர்தல் பிரச்சாரங்களில் மீண்டும் களமிறங்கும் மகிந்த ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனதிபதியுமானமகிந்த ராஜபக்‌ஷ அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுணவின் வாக்குவங்கியை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், மகிந்த ராஜபக்‌ஷ பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

அதன் பிரகாரம் நவம்பர் முதலாம் வாரம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியிலான குறிப்பிட்டளவான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செயற்பாடுகளுக்கும் மகிந்த ராஜபக்‌ஷ தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...