18 3
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் மீது கோபத்தை வெளிப்படுத்திய மகிந்த

Share

அநுர அரசின் மீது கோபத்தை வெளிப்படுத்திய மகிந்த

சமகால அரசாங்கம் தனது பாதுகாப்பு தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தான் அதிருப்தி அடையவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வேறு வேலையில்லாமல் பல குற்றச்சாட்டு சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் அதனை விட்டுவிட்டு இவற்றினை செய்கின்றது.

பழைய கோப்புகளை தூக்கிக் கொண்டு சுற்றுவதை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1558586293 jaffna university 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை முறையற்றுப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: பதிவாளர் வி. காண்டீபன் கடும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை (Logo) அனுமதி இன்றி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அவ்வாறு...

Development officers protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப்...

cbsn fusion trump says killing in iran is stopping thumbnail
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஈரான் – அமெரிக்கா மோதலைத் தவிர்க்க துருக்கி மற்றும் அரபு நாடுகள் தீவிர முயற்சி!

மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே...

25 678c45533b657
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் போதுமானதாக இல்லை: 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க IG பிரியந்த வீரசூரிய திட்டம்!

காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய சம்பளம், அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு போதுமானதாக இல்லை...