11 10
இலங்கைசெய்திகள்

நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாதாம்.! பொன்சேகாவுக்கு மகிந்தவின் பேச்சாளர் பதிலடி

Share

மகிந்த ராஜபக்சதான் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டு வந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குக் கொண்டு சென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மகிந்த ராஜபக்ச.

இப்படிபட்ட மகிந்தவையே பொன்சேகா இன்று கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இறுதிப்போரின்போது மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.

அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோநிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

“வெள்ளைக்கொடி கதையைக் கூறி படையினரைக் காட்டிக் கொடுத்த நபர்தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...