7 2
இலங்கைசெய்திகள்

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

Share

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் முடிவை மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் கட்சியாக தனித்து செல்கிறோம், தனி வேட்பாளரை நிறுத்துகிறோம், ஆனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறோம்.

எங்களுடைய கட்சி எடுத்துள்ள முடிவை மீண்டும் மாற்றுமாறு கேட்டால் நாங்கள் அதனை செய்வோம். வெற்றி என்பதே எங்களுக்கு முக்கியமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், “2015ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பலர் சென்றனர். சில பேருடன் எஞ்சியிருந்தோம். அந்த குழுவுடன் இணைந்து மிகப்பெரிய கட்சியை உருவாக்கி மகிந்த ராஜபக்சதலைமையில் தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.

இம்முறையும் அதுதான் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுனவின் 19 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள் இதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அறிவிப்பு விடுக்கப்பட்டபோதிலும் சில பொதுப் பிரதிநிதிகள் இதனைப் புறக்கணித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபகரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என தெரியவந்தது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...