இலங்கைசெய்திகள்

மகிந்த தனது இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்: அநுர திட்டவட்டம்

Share
4 1
Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இல்லத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் அவருக்கு வேறு ஓரு பொருத்தமான வீட்டை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியல் வீண் விரயத்தை நிறுத்துமாறு கோரப்பட்டது. அதனை நாம் செய்துள்ளோம்.

தமது செலவுகளில் 50 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு 30500 சதுர அடியில் பெரிய வீடு எதற்கு?

இந்த வீட்டை புனரமைப்பதற்காக 47 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உசிதமானதல்ல.

வீட்டை ஒப்படைக்குமாறு கோரும் போது தம்மை வெளியே போடுவதாக மகிந்த கூறுகின்றார்.

மகிந்த தனது பத்தாண்டு கால ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட சம்பளத்தை எடுத்ததில்லை.

மஹிந்தவின் புதல்வர் யோஷிதவும் கடற்படையில் பதவி வகித்த காலத்தில் சம்பளப் பணத்தை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படியானால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தொகை சொத்துக்கள் இருக்க வேண்டும்” என்றார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...