யாழில் குழந்தையை பணயம் வைத்து மோசமான சம்பவம்

rtjy 287

யாழில் குழந்தையை பணயம் வைத்து மோசமான சம்பவம்

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியில் வீடொன்றில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (29.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபா பணம், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று மிரட்டி விட்டு வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திரைப்படங்களில் இடம்பெறுவதை போன்று குழந்தையை பணயம் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் இவ்வாறானதொரு கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Exit mobile version