யாழில் போலி இலக்க தகட்டுடன் காணப்பட்ட சொகுசு கார் மீட்பு
போலி இலக்க தகட்டுடன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில், தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் நேற்று (20.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸாரின் விசேட புலானாய்வு தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.M.உதயபால தலமையில் மேற்படி கார் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி, கார் குற்றச்செயல்களுக்கு அல்லது போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.