18 13
இலங்கைசெய்திகள்

விமான நிலையத்திற்குள் நுழைய சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி

Share

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் கட்டுநாயக்க விமான நிலைய (BIA) புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் (Airport and Aviation Services) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.

எனினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்தப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...