மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து

tamilni 37

மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் விபத்துக்குட்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (02.11.2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தானது மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக வாகனம் ஒன்றுக்கு வழிவிடும்போது தடம் புரண்டுள்ளது.

இந்நிலையில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் உயிர்சேதமோ பலத்த காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version